அம்மா

அம்மா
நேசத்தை கற்றுக்கொடுத்தவள்
நேரத்தை பொன்னாக்கியவள்
நேற்றைய விடியலாய்
நாளைய உதயமாய்
நம்பிக்கை வார்த்தவள் -அவள்

நட்பை பேணியவள்
நாணயமாய் நடந்தவள்
நற்பண்பை வளர்த்தவள்
நன்றியை நெஞ்சிலே சுமந்தவள் -அவள்

அவளுக்கென வாழ தெரியாதவள்
அன்பிற்கே அற்பணிந்து வாழ்ந்தவள்
அம்மா என்ற மூன்றெழுத்து
மந்திரத்திற்கு உவமையானவள்

கண்டிக்க தெரிந்தவள்
தண்டிக்க தெரியாதவள்
தீமை செய்வோர்க்கும் நன்மையே செய்தவள்
தாய்மைக்கு உருவகம் அவள்

கொடுக்க தெரிந்தவள் -பிறரை
கெடுக்க தெரியாதவள்
கொட்டும் மழையிலும்
தன்னை நினைக்காதவள்

காற்றிலும்
இயற்கையிலும்
மழையிலும்
கொடியிலும்
வனப்பிலும் -என்
கவியிலும் கலந்தவள் -அவள்
என் அம்மா

சிவ. ஜெயஸ்ரீ

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (6-Apr-15, 7:58 pm)
Tanglish : amma
பார்வை : 188

மேலே