காகிதத்தில் மனதை மடித்து

காகிதத்தில் மனதை மடித்து..
கல்லாப்பெட்டியில் மறைத்த சொந்தம்
என்பை பணம் பார்த்தே..
பகடையாட்டம் ஆடுகிறது என்னுடன்
வெற்றி எனதென்றால் வெறுஞ்சிரிப்பு என்முன்னால்..
தோல்வி யெனதென்றால் பெறுஞ்சிரிப்பு என்பின்னால்..
அத்தனையும் உணர்ந்தபோது எனக்குள் தனிசிரிப்பு
வெற்றிதோல்வி எதுவானாலும் தாய்மட்டும் என்னுடன்
அன்பாய் அமர்ந்த அவரிடம் கேட்டது
'என்னம்மா இப்படி பன்றாங்களேமா'

எழுதியவர் : moorthi (7-Apr-15, 12:06 pm)
பார்வை : 537

மேலே