நட்புக்காக ஒரு பிரார்த்தனை


இறைவா
எனக்குள் நட்பின் ஒளி
உதிக்கட்டும்

அதிலே என் நண்பர்களின்
முகமே தெரியட்டும்

இறைவா
எனக்குள் நட்பின் நதி
உருவாகட்டும்

அதிலே என் நண்பர்களின்
நினைவுகளே ஓடட்டும்

இறைவா
எனக்குள் அன்பின் கடல்
பெருகட்டும்

அதிலே எங்கும் நட்பின்
அலை அடிக்கட்டும்

இறைவா
எனக்குள் நட்பின் கரு
உருவாகட்டும்

அதிலே என் நண்பர்களே வந்து
பிறக்கட்டும்.............

இப்படிக்கு.........................நட்புடன் உன்னவன்

எழுதியவர் : நந்தி (2-May-11, 1:27 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 624

மேலே