ரோஜா மலராய் மணம்வீசு

காதல்பார்வை முகம்பார்க்கும்
காமப்பார்வை முகம்தவிர்க்கும்
முகம்பார்க்கும் காதல்பார்வைக்கு..
புன்முறுவல் பரிசளித்து
முகம்தவிர்த்து கீழேசென்றால்..
முள்ளால் பரிசளிக்க வேண்டுமென்றே
பெண்ணே..
உன்னை மலரென்று அழைத்தோம் -நீ
முள்ளும் மலரும் ஒன்றினைந்த..
ரோஜா மலராய் மணம்வீசு

எழுதியவர் : moorthi (8-Apr-15, 12:06 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 75

மேலே