வட்டியென்னும் அட்டை

..."" ""...

முதல்தனை அழித்து
உள்ளதையும் இழந்து
உயிரினை குடிக்கும்
வட்டியெனும் பேய் !!!

மாளிகை வாசலில் தன்
கைகட்டியே நிற்கும்
குடிசைக்குள் புகுந்து
கோரதாண்டம் ஆடும் !!!

இனிப்பு அரிதாரம் பூசிய
கொடியதொரு நச்சு
தெரிந்தே விழுகின்ற
புதைகுழியின் பொந்து !!!

மதுவில் விழுந்து தன்
மதியினை இழந்தவரையும்
மீட்டிடலாம் முடியாது
வட்டியில் வீழ்ந்தவரை !!!

அடகுவைத்து அகப்பட்டு
மூழ்கியே மூச்சடைக்கும்
மீண்டுவிட முடியாத
சூழ்ச்சுமான சுரங்கம் !!!

பண்டம் பாத்திரங்களை
பட்டினியால் பனையம்வைத்து
அட்டியலை அடகுவைத்த
அந்தகாலங்கள் மாறியே !!!

நாகரிக மாற்றத்தினால்
துண்டு அட்டை சீட்டில்
தடவி தடவி தேய்த்து
தொலைந்தவர் இன்று !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (8-Apr-15, 12:25 pm)
பார்வை : 69

மேலே