ரோஜா பூச்சி

ரோஜா....! பூச்சி....!
பிறர் -
மணங்கமழ...
இதழ் அவிழ்ந்த
இளம் முகத்தின்
இசை நகையாய்...
பன்னீர் ரோஜா....!
தன்-
மனங்களிக்க
மலர் மாறி......
மலர் ஏறி....
மது குடிக்கும்
பட்டாம் பூச்சி....!
இந்த -
ரோஜா.....! பூச்சி.....!
மனிதர்களால்...!
நிறைந்ததே...
இம் மண்ணுலகம்....!