மழை பெய்த நேற்றையப் பொழுதில்-3
நகம் கடித்து
நிற்கிறாய்.
நான் அமர்ந்த
நாற்காலி உரசி
கடக்கிறாய்.
குழந்தை உறங்கியாச்சு.
எனக்குக் கேட்கும்படி
பக்கத்து வீட்டு பாட்டியிடம்
சத்தம் போட்டுச் சொல்கிறாய்.
வேகமாய் கடிகடிகாரத்தை
மாற்றியது யார்?
முனகிக் கொண்டே
மணி பார்க்கிறாய்.
எழுத்துக்கள் மறந்துப்போக
என் கண்ணாளனுக்கு என
செல்லமாய் சாபம்தருகிறாய்.
இதுவேற அப்பப்போ
குத்திக்கொண்டிருக்கும்.
காதணிகளை கழற்றி-என்
மேசையிலேயே வைக்கிறாய்.
வைத்து நீ திரும்பயில்
மெதுவாய் சிரித்து-உன்
கரம்பற்றி இழுத்து என்
மடியலமர்த்திப் பார் என்கிறேன்.
கவிதையாம் கவிதை....
என்ன பார்க்கிறாய்?
நான் தூங்கணும் விடு
என்று பொய்ச் சொல்கிறாய்.
கவிதையல்ல.
சற்றுமுன் நீ செய்த
அத்தனையும் என
காகிதத்தை மூடுகிறேன்.
வா நான் மூடியது பாேல்
நடித்த காதலை திறப்போம்.
--கனா காண்பவன்.