இரண்டும் ஒன்றே

காடு ..
நகர்ந்து கொண்டே
வருகிறது..
என்னருகில்!

கடல் ..
விலகி போய்க்கொண்டே
இருக்கிறது..
என்னிடமிருந்து..!

வானம் ..
வந்து கொண்டே
இருக்கிறது ..
என்னை நோக்கி..!

காற்று ..
குறைந்து கொண்டே
போகிறது..
என்னை சுற்றி..!

தீம்..தீம்..தீம்
தீம்..தீம்..தீம்
தீம்..தீம்..தீம்
தீம்..தீம்..தீம்

ஒலி..
அதிகமாகிக் கொண்டே
இருக்கிறது..
என்னுள்ளே..!

அமிழ்கிறேன் ..
என்னுள்ளே..
எதுவுமே இல்லை..
இப்போது..!

இது மரணமா..
இல்லை தியானமா..
எல்லாம் திரும்பினால்..
தியானம் ..!
இல்லையென்றால் ..
மரணம்..!

..
அட.. ...
அவ்வளவுதானா?

..
தீம்..தீம்..தீம்
தீம்..தீம்..தீம்
தீம்..தீம்..தீம்
தீம்..தீம்..தீம்
..
..
..
..

எழுதியவர் : கருணா (9-Apr-15, 5:19 pm)
Tanglish : irandum ondrey
பார்வை : 63

மேலே