வேண்டாம் நீ சும்மா இருக்கிறேன்

என்னை யாருக்கும்
பிடிக்கவில்லை..
எனக்கும் கூட!
என்னை யாரும்
புரிந்து கொள்ள முடிவதில்லை ..
என்னாலும் கூட..!
என்னை யாராலும்
வெல்ல முடிவதில்லை..
என்னாலும் கூட..!
என்னால் உறுதியாய்
இருக்க முடிவதில்லை
மற்ற சில மனங்கள் போல..!
எனக்கென்று கட்டுப்பாடுகள்
ஏதுமில்லை ..எதிலும் ..
பலரைப் போல !
இப்படியெல்லாம் தான்
நானிருப்பேன் ..உன்னோடு கூட
சொல்கின்றது என் மனம்!
இது அவமானம்..
என்றேன் நான்!
இல்லை வெகுமானம்..
என்கிறது மனம் !
எங்கிருந்து மனதால்
மனதை நான்
அறிவது.. பின் அதை
வெல்வது..?
மனமற்று போகிறேன்..
ஒரு கணம் ..
அடடா ..அதுவே
பெரும் சுகம்!