பாடல்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே…

பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
உன்னை புரிந்து கொண்டான் உண்மை தெரிந்துகொண்டான்
இந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே…
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்
இன்று நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உந்தன் சொந்தம்
காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை எந்தன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே…
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என்மேலே
அது தானே எழுந்து மேலே விழுந்து இழுத்தது வலைபோலே

நெற்றி பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் எந்தன் சொந்தம்
நெஞ்ச தட்டிலே என்னை கொட்டினேன் எந்தன் யாவும் உந்தன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மை புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே…
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

எழுதியவர் : (10-Apr-15, 12:05 am)
சேர்த்தது : Aashik Kavi
Tanglish : paadal
பார்வை : 34

மேலே