நான் நாம் நட்பு
அன்பு கொஞ்சும் நெஞ்சம்
தஞ்சம் கேட்டு கெஞ்சும்
பாச பஞ்சம் வந்த வேளையிலே..
கொஞ்சம்தான் பாசம்
மிச்சம்தான் நேசம்
நட்பு தேசம் மறையுமா..?
நம் நட்பு வேசம் கலையுமா..?
என்னுடன் பேச
என்ன தயக்கம்
எதையும் தருவேன்
என் நட்பு பயக்கும்
உன்னிடம் பேச
ஊமை கலக்கம்
உயிரையும் தருவேன்
ஊரை வியக்கும்
சென்ற சுதந்திர தினம்
சதுரங்க போட்டி
வென்ற பரிசு பணம்
அடித்தோம் லூட்டி
இந்த வருட சுதந்திர தினம்
நாம் இன்றி நான் மட்டும்
பறிபோனதே என் சுதந்திரம்....
ரம்மி விளையாட்டில்
டம்மியான நண்பர்கள் ஆனோம்
நாம் இன்றி
நட்பு மட்டும் மம்மியாக { பேய் }
என்னுடன் ஒருவன் வந்தான்
உன்னுடன் ஒருவன் சென்றான்
கண் மூடுவதற்குள்
கல்லூரி முடிந்தது
மண் மூடுவதற்குள்
மலரட்டும் நம் நட்பு... ..
இப்படிக்கு
நன்றி கலந்த
நட்புடன்
ந.இராஜ்குமார்