நினைவலைகளின் ஆழ்கடலில் நான்

நினைவலைகளின் ஊடாக
உள்மனதின் எண்ணக் கடலின் உள்ளே
ஆழத்தில், மிக ஆழத்தில் செல்கிறேன்!

அது என்னை ஆயாசமடையச் செய்கிறது,
ஆனாலும் அயர்வைத் தரவில்லை,
ஏனெனில் அது என் ஆளுமைக்குட்பட்டது!

தடுப்பாரும், தடை விதிப்பாரும்
யாருமில்லை; அனைத்துமே
வீணாகப் போகின்றன!

என் நினைவலைகளில்
நான் நீந்தும் பொழுது,
சிறிது நேரம் மட்டுமே;

மிகச் சிறிது நேரமே ஆனாலும்,
மீண்டும் கடற்கரையோரம்
நான் இருக்கிறேன்!

மிகக் குறுகிய நேரத்தில்
மீண்டிருக்கிறேன்; இன்னும்
அதுவொரு அருமையான இனிமையே!

ஆதாரம்: DEEP INSIDE Poem by Er.S.கருணாநிதி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Apr-15, 10:35 am)
பார்வை : 269

மேலே