முத்தொகை

முத்தொகை
==================================================ருத்ரா
(மூன்று மூன்று கவிதைகளின் குறுந்தொகை)



உள்ளங்கையை
உற்றுப்பார்.
சுக்கிரமேடு சூரியமேடு
எல்லாம் பார்த்த பின்
அந்த வக்கிரமேடு அதில்
எப்படி வந்தது?

லஞ்சம்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________


விடிந்ததும் டூத் பேஸ்டில்
உப்பு இருக்கிறதா இல்லையா
என்று
கார்ப்பரேட் காரனுக்கு கவலை.
"அவளை" இந்த உதடுகளால்
நேற்று எத்தனை தடவை கூப்பிட்டிருப்பேன்
இது அவ்வளவும்
சர்க்கரை தானே!
இது உன் கவலை.

கவலை

______________________________________________________________


கார்பரேஷன் குழாயை
திறந்தால் தண்ணீர் வரவில்லை.
டி வியை திறந்தால்
கொட்டுகிறது குடம் குடமாய்
கண்ணீர்
குடியுங்கள்.

வாழ்க்கை

____________________________________________________________________


கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
கேபிடேஷன் ஃபீ
கொடுத்த பின்னா?
கொடுக்கும் முன்னா?
"பிச்சை புகினும்" கற்கை....

கல்வி எனும் வியாபாரம்

____________________________________________________________________

எழுதியவர் : ருத்ரா (10-Apr-15, 10:24 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 66

மேலே