நீலக்குயில் தேசம்34---ப்ரியா

(முன் கதை சுருக்கம்:கயலின் தாத்தா தனது பிடிவாத குணத்தை களைந்து பல வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்ற மகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தார்.........கயலின் கனவுக்காதலனை எப்படியாது தன் அண்ணன் உதவியுடன் கண்டுபிடித்து தருகிறேன் என அவளுடன் படிக்கும் மாணவி ஜெனி வாக்களித்தாள்.......மனதில் பல சிந்தனையுடன் குழப்பத்திலிருக்கும் மதனை காண வந்தார் அந்த காவல்துறை அதிகாரி கார்த்திகேயன்.......!)

இனி......

அந்த கடிதத்தை படித்து முடித்து வைத்த மதன்......எப்படியாவது அந்த பெண்ணை கண்டுபுடிக்கவேண்டும் என்ற மன உறுதியோடு தன் கண்களை மூடி யோசனையில் இருந்தான்.......அச்சமயம் "ஹலோ மிஸ்டர் மதன் நீங்க இங்க புதுசா வந்திருக்கிற வனத்துறை அதிகாரிதானே? ஐ ஆம் கார்த்திகேயன் எஸ்.ஐ ப்ரம் இரணியல்" என்று மிரட்டும் குரலில் காவலர் உடையில் வந்து அவன் முன் நின்றார் அந்த சப் இன்ஸ் கார்த்திகேயன் என்று சொல்லிக்கொண்டே அவன் முன் வந்து நின்றார் அவர்.......

நம்மை பார்ப்பதற்காக போலிஸ் எதற்கு? என்று குழப்பத்தோடு வந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல்......."ஹலோ சார் நான் தான் மதன் என்ன விஷயம் சொல்லுங்க" என்று தானும் ஒரு அரசு அதிகாரிதான் என்ற தோரணையில் கம்பீரமாய் பேசினான் மதன்.

இருவரும் கைக்குலுக்கிக்கொண்டனர்.....மதனிடம் எதுவும் சொல்லாமலேயே உட்கார்ந்தான் கார்த்திகேயன்.

எதுவும் புரியாத மதன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான் சற்று குழப்பமாக?

மதனின் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட கார்த்திகேயன் சிரித்தார் .......

என்ன சார் ஒன்னு புரியல இல்ல?

ரொம்ப குழப்பிக்க வேண்டாம் நானே சொல்றேன்.......நான் பக்கத்து வீடுதான், புதுசா இன்னிக்குதான் வந்திருக்கீங்கன்னு ஸ்டேசன்ல சொன்னாங்க அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் , இதோ இதுதான் என் வீடு எதுவும் தேவைனா கேட்டுக்கோங்க.....தனியா இருக்கிறது போர் அப்டீன்னு நினச்சா? வேணும்னா என்கூடயும் தங்கிக்கலாம் நானும் பேச்சிலர்தான்....நானும் இங்க வேலையில சேர்ந்து ஒன்றரை வருடங்கள் தான் ஆகுது என்று தன் குடும்ப வரலாறையும் சொல்லிக்கொண்டிருந்தார் கார்த்திகேயன்......

ஆனால் மதன் பெரிய அளவில் அவரிடம் பேசிக்கொள்ளவில்லை....... சரி,ம்ம்ம்...என்று மட்டும் அவன் கேட்ட சிலவற்றிற்கும் பதிலளித்தான்.
சிறிது நேரத்தில் கார்த்திகேயன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்......!

மதனுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் மதன் கேட்காமலேயே செய்து கொடுத்தான் கார்த்திகேயன் பழகுவதற்கு சாதுவாக தன் நண்பர்களை போன்ற குணம் கொண்டவனாக இருப்பதால் மதனுக்கும் அவனை மிகவும் பிடித்துப்போனது....ஆனால் தன் சொந்த விஷயங்கள் எதுவும் அவனிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

அந்த இடங்களும் மதனுக்கு மிகவும் பிடித்திருந்தது.....அதுவும் அந்த இயற்கை சூளலைப்பற்றி அந்த கடிதத்தில் அந்த பெண் விவரித்திருந்தது இன்னும் அழகாய் அவன் மனதை வருடியது.......தனக்காய் அவள் அந்த தேவதை வண்டியிலிருந்து குதித்தாள் என்பதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை நம் மேல் எவ்வளவு அன்பு......முகம் பார்க்காமலேயே நம்மை நேசித்து இன்று நம்மை பார்க்க இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறாள்....ச்சே என்னடா காலம் இது கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அவ யாரு எந்த இடம் என்னங்கிறத கண்டுபிடிச்சிருக்கலாம் என்று தன்னை தானே நொந்துகொண்டான்......

இதற்கு என்னதான் வழி கார்த்திகேயனிடம் பேசிப்பார்ப்போமா?என நினைத்தவன்...வேணாம் அவன்கிட்ட இதெல்லாம் சொன்னா ஒத்துவராது நோண்டி நோண்டி கேப்பான் அப்புறம் கிண்டலடிப்பான்..அதுமட்டமல்ல அது மட்டுமல்ல நம்ம ஏதாவது சொல்லப்போய் அந்த பொண்ணுக்கும் ஏதாவது பிரச்சனை வந்திரும் என அவனிடம் சொல்லாமல் விட்டுவிட்டான்......

தன் நண்பர்களுக்கு கால்பண்ணி இங்கு நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொன்னான்........அப்போ உன் அத்தைப்பொண்ணு கயல்விழி??என்று அவர்கள் கேட்க கேள்விக்குறியானது இவனது மனமும்??????

______________________________________________________________________________________________________________________________________

ஊட்டியில் நீலமலை சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்னும் செல்ல வேண்டிய ஒரு சில இடங்களுக்கும் சென்று விட்டு அடுத்தநாள் கிளம்ப தயாராய் இருந்தனர் கயல்விழியின் கல்லூரியிலுள்ளவர்கள்........அனைவருமே மகிழ்ச்சியாயிருக்க கயல்விழியும் ராகேஷும் மட்டும் வருத்தத்துடன் இருந்தனர்.........

தான் நினைத்த காரியத்தை(கயல்விழியை அடைவது) முடிக்கமுடியவில்லையே என்ற கோவத்தில் ராகேஷ்....

தன் கனவுக்காதலனை பக்கத்திலிருந்தும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் கயல்.......

ஏதோ கயலின் இந்த கனவுக்காதல் கதை மூலம் ஜெனியும் இவர்களுக்கு நெருக்கமானாள், அன்று தங்கிய அறையில் அரு அறையில் 8 மாணவிகள் மட்டும் தங்கியிருந்தனர் அதில் ஒரு பக்கம் இவர்கள் 4பேரும் கயல்விழி ஷீபா அஜிதா மற்றும் ஜெனி...... கயலின் சோகமான முகத்தையும் அவளது உடைந்த குரலையும் சிதைந்த புன்னகையையும் அவர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.....

அப்பொழுதுதான் கயலுக்கு ஒரு எண்ணம் தோன்றியது....ஏய் ஷீபா "என்னோட விபத்து நடந்த இடத்துலதான் மற்றப்பொருட்களுடன் மொபைல் போனும் தவறிபோச்சு இல்ல எப்படியும் கொஞ்ச நேரத்துல அவன் அந்த இடத்திற்க்கு வந்திருப்பான் அப்போ கண்டிப்பா அது அவனுக்கு கிடைக்கும் அத வச்சு என்ன தேடி வருவான் இல்ல"..........என்று பாசிட்டிவாக அவள் பேசினாள், ஆம் என்பது போல் தோழிகளும் தலையசைத்தனர்.......

சரிடி நான் என் அண்ணன்கிட்ட பேசிட்டு சொல்றேன், மனசபோட்டுக்குளப்பிக்காத எல்லாம் நல்ல படியாதான் நடக்கும் என்று ஜெனி நம்பிக்கையூட்டினாள்........!

அப்போ இப்பவே சொல்லுடி என்று அவளது போனை எடுத்துக்கையிலேயே கொடுத்தாள் கயல்.

உடனே தன் அண்ணனை தொடர்புகொண்டாள் ஜெனி...............

"ஹலோ அண்ணா நான் ஜெனி பேசுறேன்"......ம்ம்....சொல்லு டியர் எப்டி இருக்கா? இப்போ எங்க இருக்கீங்க மேம்" என்று கிண்டலாய் பேசிக்கொண்டே மதனின் வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தான் கார்த்திகேயன்.....





தொடரும்.......!

எழுதியவர் : ப்ரியா (10-Apr-15, 2:38 pm)
பார்வை : 654

மேலே