எங்கள் காவிரியே

எங்கள் காவிரியே.....

காவிரி என்றப் பெயரே - பெருங்
காவிய மாகும் கேளீர்!
காவிரி என்றாலே புனல் - பரப்பில்
கொழிக்கும் பொன்னென் றுபேரே!
பிறக்கு மிடமோ மேற்கே - கிழக்கில்
சேர்ந்திடும் வங்கக் கடலில்!
முக்கொம் பாய்ப்பிரி யுமிடையில் - இணையும்
மீண்டும் கல்ல ணையில்!

பாயும் இயற்கையில் ஆறு - என்றும்
பள்ளத் தாக்கைத் தேடி!
பூகோள அறிவியல் யாவும் - சொல்ல
புதிதாய் யில்லை ஏதும்!
இதுபோல் தண்ணீர் தொல்லை - கடந்த
அறுபது களிலே இல்லை!
சுயனலத் தாலே விளைந்தப் - புதுச்
சிக்கல் கல்யவும் பாரீர்!

மின்சாரம் விளைபொருள் பலவும் - தமிழ்
மண்ணி லிருந்தே போகும்!
குடிக்கத் தண்ணீர் கேட்டால் - மனம்
குரங்கு போலேத் தாவும்!
அவர்மேல் குறையேது மில்லை- இங்கே
எவருக் குமக்கரை யில்லை!
முப்போகம் விளைந்த பூமி - இன்று
மூன்றில் ஒன்றே னுங்காமி!

அடுக்கடுக் காயணை கல்பல - கட்ட
ஆற்றின் குறுக்கே வேண்டி!
அத்துனை பேருமொன் றாய்- அங்கே
சித்த மாயிருக் கின்றாரே!
இத்தனை நடந்தப் பின்னும் - தமிழா
இன்னுமா சும்மா உள்ளாய்!
எத்தனைக் காலந்தான் இன்னும் - நீ
அண்டிப் பிழைப் பாயோ!

பார்த்திபன் .ப
06/04/2015

எழுதியவர் : பார்த்திபன்.ப (10-Apr-15, 2:46 pm)
சேர்த்தது : P PARTHIBAN
பார்வை : 52

மேலே