தாயே தமிழே
தாயே தமிழே....
அன்னைத் தமிழே வாழ்க! - எங்கள்
அனைத்தும் நீயே வாழ்க!
எல்லா மொழிக்கும் தாயே! - உன்னை
ஏச்சிப் பிழைப்பவன் நாயே!
தேனில் பலாவைக் குழைத்து! - உண்ணும்
தெவிட்டா தெங்கள் தமிழே!
மழலையர் கொஞ்சிடும் நாவில்! - நீயோ
மகிழ்ச்சியில் துள்ளிடு வாயே!
அம்மா என்றே அழைக்கும்! - பசுவை
அழகுடன் துள்ளிடும் கன்று!
உலகினில் எங்கினும் காணோம் - இந்த
உயரிய மொழியைப் போலே!
அந்நிய மொழிகளுக் கெல்லாம்! - என்றும்
ஆதியும் அந்தமும் நீயே!
இயலிசை நாடக மென்று! - வெகு
இயல்பாய் உலாவரு கின்றாயே!
மழலையின் வாயிலும் இனிப்பாய்! - சிறு
குழந்தையின் பேச்சிலும் இருப்பாய்!
வெள்ளையர் கண்டனர் உன்னை! - யாப்பெனும்
வியப்பால் ஆழ்த்தினர் உன்னை!
எனக்கேதும் குறைவில் லைத்தாயே! - நான்
என்றுமுன் மகனாக வேண்டும்!
தொல்க்காப் பியம்கண்ட வள்நீ! - பழந்
தொன்மைக் குச்சொந் தக்காரி!
தலைஇடைக் கடையென முப்பெரும்! - சங்கத்
தலைமுறை யைக்கண் டவளே!
பத்துப் பாட்டுடன் சேர்ந்த! எட்டுத்தொகை
பதினெண் மேற்க்க ணக்காம்!
பத்தோடு மீண்டு மெட்டாம்! அதற்குபெயர்
பதினெண் கீழ்க்க ணக்காம்!
ஐம்பெருங் காப்பியங் களோடே! மணக்கும்
ஐஞ்சிறு காப்பி யங்கள்!
எல்லா மதங்களுக் கும்நீயே! நல்
இலக்கியங் கள்பலத் தந்தாய்!
உலகத் திற்க்கே தாய்நீயே! என்று
உரக்க நான்கூவி டுவேனே!
என்னுயிர் இருக்கும் வரைத்! தாயே
உன்னுயி ரைப்போக விடேன்!
அன்னைத் தமிழே வாழ்க! - எங்கள்
அனைத்தும் நீயே வாழ்க!
பார்த்திபன். ப
04/04/2015