அம்மாவின் கைவண்ணம்

தேடல் உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
நானும் தேடினேன்
எல்லா உணவகங்களிலும்
ஒருவேளை ருசியறிய......!!!

மணமில்லை ருசியில்லை
உண்டாம் உண்டு நோயுண்டு
என்றது வைத்தியரின்
பற்பல வகையறா
சோதனை அறிக்கைகள்......!!!

ஓடினேன் ஓடினேன்
வீடு நோக்கி ஓடினேன்
அம்மாவின் கைப்பதத்துக்கும்
செத்துவிட்ட என் நாக்குக்கு
உயிரெனும் கொடுத்திடவும்......!!!

ஆஹ்ஹா...!!!
கண்டேன்...!!!
உண்டேன்...!!!
உணர்ந்தேன்...!!!
தெளிந்தேன் ...!!!

மணம் சுவை குணம்
மூன்றையும் மிஞ்சிய
உணர்வினை உணர்ந்தேன்...!
தட்டு நிறைந்திடா உணவிலும்
மனசுடன் வயிறும் நிறைந்திட கண்டேன்...!!!

அன்போடு பாசத்தையும்
அள்ளி அள்ளி தெளித்து
அம்மா அளித்திடும் உணவுக்கு
ஈடுண்டா ஏதுண்டு
ஈரேழு உலகத்திலும்...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (11-Apr-15, 7:16 pm)
பார்வை : 269

மேலே