கடனிருப்பு -ரகு

மனோவிகாரங்கள் மீதிற்
பகடைகளென
உருள்கின்றன கடன்கள்
தூக்கத்தில்

எதோ முறிகிற சப்தம்
மிக அருகாமையில்
புரண்டுருள்கிறேன் நானும்
அன்பெனத் துடித்து

கையில் வெளக்குமாரோ
ஏக வசை பாடலோ
கடனிடமில்லை ஏனோ
வாசலோடுத் திரும்புகின்றனக்
கனவுகள்

இரவொத்த நிறமதற்கு
உயிர் ரேகை அழிப்பதாக
உள்ளங்கையில் பதுங்கப்
பட்டவர்களுக்கே வெளிச்சம்

ஓர் முக்கிய அறிவிப்பு

விடியலில் நானும்
செல்வந்தராகியிருந்தேன்
தூக்கத்தைத் தொலைத்துவிட்டு !

எழுதியவர் : சுஜய் ரகு (11-Apr-15, 8:25 pm)
பார்வை : 89

மேலே