மறக்கின்றன மனவலிகள் மலராலே
![](https://eluthu.com/images/loading.gif)
---புன்னகைப் பூத்திடும் புதுமலரால்
புதுமைகள் தோன்றிடும் புத்துணர்வால் !
---குறுநகை தவழ்ந்திடும் மழலையால்
குன்றான சோகங்களும் மறைந்திடும் !
---மறக்கின்றன மனவலிகள் மலராலே
மகிழ்கின்றன மனங்களும் மண்ணிலே !
---மணக்கிறது மதுரை மரிக்கொழுந்தாய்
மயக்குகிறது மதிமுகமும் மந்திரமாய் !
---குளிர்ந்திட வைத்திடும் குறும்படம்
குவிக்கிறது ஆனந்தம் அரும்பாலே !
---பிறையாய் குறைந்திடா பிஞ்சுநிலா
பிறந்திட்ட மாட்சிமிகு மஞ்சள்நிலா !
---பொன்மாலைப் பொழுதின் சுகமாய்
பொங்கி வழிந்திடும் இதயங்களில் !
---பொக்கைவாய் சிரிப்பால் விழிகளும்
பொழிந்திடும் இன்பத்தின் சாரல்களை !
பழனி குமார்
( படம் - முகநூல் பதிவிறக்கம் )