விழிகளோடு பேசும் விசித்திரம் வேண்டாம்

இரவல் நிலா நீ!
இரு இதயங்கள் இணைந்திட இரவில் உலா நீ!

என் ராணி நீ! ராசி நீ!
என் ராகம் நீ! யோகம் நீ!
என் சாபம் நீ! சாகாவரம் நீ!

பால் நீலம் உன் கண்கள்
வான் நீளம் உன் புருவம்
இருபது நெல் நிரம்ப
இருப்பது உன் மூக்கு
நெய்யோடு தேனைச்சேர்த்து
பொய்யோடு பேசுமுன் உதடு.

விழிகளோடு பேசும்
விசித்திரம் வேண்டாம்
எனக்கு கொடுத்திடு
ஓர் காதல் வாக்கு - இல்லை
உனக்கு கொடுக்கும் காதல் கடிதத்தை வாங்கு.

எழுதியவர் : அரிபா (12-Apr-15, 6:44 pm)
பார்வை : 155

மேலே