நம் திருமணத்தில்

கற்பனைகள் நிஜங்களாகின்றன
நம் திருமணத்தில்
இரு வித பயணங்கள்
ஒன்றாகின்றன
நம் வாழ்வில்
சிறு சிணுங்கல்
அழகாகின்றன
நம் தனிமையில்
அந்திவானம்
ரசனையாகின்றன
உன் தோள் சாய்கையில்
நிலவொளி
சுகமாகின்றன
நம் கனவுகளில்
நொடி நேரம் கூட
சிலிர்க்கின்றன
நம் மண வாழ்வில்