விவசாயிகளின் கேடரியம்
மழையே,வெயிலே-உங்களை
ஒன்று கேட்கிறோம்.
எதுவாய் இருந்தாலும் இதமாய் அடி!!
பட்டினத்தார் பெண்களின் பாலத்காரம் வெளியூர் வரை தெரியுதே!!
வாட்ஸ்ஆப்பிலும்,
முகப்புத்தகத்திலும் அதிகமாய்
பரவுதே!!!
எங்கள் துயர் ஒன்று யாருக்கு
தெரியும்!!
விவசாயிகளின் பிரச்சனை
இப்புவியிலே தீராத வழக்கா!!??
மூஸா நபியோ அக்காலத்திலும்
தண்ணீருக்காக அல்லாஹ்விடம்
கேட்டாராம்!.
இன்று வரை தீர்ந்தபாடுல்லை
தண்ணீர்!!!!!!!!
கடவுளிடம் தண்ணீர் கேட்டதால்
மழை கொட்டித்தீர்த்ததில்
நாசமடைந்தன பயிர்கள்!
கடவுளிடம் வெயில் கேட்டதால்
காய்ந்தே வாடின பயிர்கள்!
எச்சூழ்நிலையிலும்
எங்ளுக்கே துயரம்!!
என்று ஆகுமோ விவசாயிகளின் வாழ்க்கை உயரம்!!
எங்களுக்கோ கேடரியம் தரலாம்,
அதிக தற்கொலையில் ஈடுபட்ட
ஒரே பகுதி விவசாயிகளின் பகுதி!!