ஒத்தி வைப்பு

மூணு நாள் என்றால்
மூணு நாளேவா
அஞ்சாவது நாள் தான் என்று
அஞ்சாது சொல்வாள்
மூணு வருசம் என்றாள்
மூணு வருசமேவா என்று
இரண்டாவது பிள்ளையை
ஏழு வருசம் தள்ளிவைத்தாள்
அவள் கொண்டு வரும்
ஒத்திவைப்புத் தீர்மானங்கள்
எதிர்க்கட்சி
பலமில்லாததால்
ஏக மனதாக
நிறைவேற்றப்படுகின்றன

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (13-Apr-15, 7:28 pm)
பார்வை : 76

மேலே