தமிழன்னையே

அம்மாவின் அன்புடன்!
அப்பாவின் அரவணைப்புடன்!

ஆண்டவன் கருணையுடன்!
ஆயுள் பலத்துடன்!

இருப்பதைக் கொண்டு வாழ்வின்
இன்பத்தை இரட்டிப்பாக்கி!

ஈதல் கொடையுடன்!
ஈரம் கொண்ட நெஞ்சத்துடன்!

உண்மை உள்ள மனம் கொண்டு
உன் பிறந்தநாளான இன்றுமுதல்,

ஊனாக உனைக் கொண்டு
ஊரும் எறும்பினம் போல்

ஒற்றுமையாக தமிழர்கள் நாங்கள்
ஒருகோடி நூறாண்டு

ஓதவேண்டும் உன் புகழை
ஓவியத் தமிழன்னையே!

ஔவையார் வழிநடக்க
ஔவியம் செய்வாயாக!!!!!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (13-Apr-15, 11:34 pm)
பார்வை : 134

மேலே