மேழத் திருநாள் வாழ்த்து

இளவேனில் வருகையில்
இன்பங்கள் பெருகட்டும்...
முதுவேனில் தொடர்ந்தாலும்
மகிழ்ச்சிகள் நிறையட்டும்...
கார் பொழுதிலும்
காலங்கள் நமதாகட்டும்...
கூதிர் காலத்திலும்
சுகம் நம் வரமாகட்டும்...
முன்பனி நிறைந்தாலும்
அறுவடைகள் சிறக்கட்டும்...
பின்பனி பருவத்திலும்
செல்வங்கள் செழிக்கட்டும்...

எம்புத்தாண்டு சுறவத் திங்களாயினும்
இம்மேழம் முழுதும் பழந்தமிழ் பண்பாட்டு திருவிழாக்கள் நிறையட்டும்...
நம்மை பண்படுத்துவதும் நாம் பயன்படுத்துவதும் எம்தமிழாகட்டும்..

இனிய மேழத் திருநாள் (சித்திரைத் திருநாள்) நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண் வேந்தன் (13-Apr-15, 9:38 pm)
சேர்த்தது : அருண்வேந்தன்
பார்வை : 113

மேலே