மன்மத ராணி
தமிழ்க்கணிகையே வாழ்க !
உன்னை
தமிழ்க் கன்னியாகவும் தமிழ்த் தாயாகவும்
உலாவ விட்ட
எழுத்தறிவித்த இறைவனை ஒழிக்காமல்...
உயிர் மேல் உயிர்மெய்... " ஊ " வடிவ உயிரைப் புணர்ந்துப் புணர்ந்து
சலிக்காமல் சளைக்காமல் இளைக்காமல்
நிரந்தர இளமையுடன்
காமக் களிப்பை காலம் காலமாய்க் கழிக்கும்
அந்தரங்க சுந்தர வேசியே... இன்ப வியப்பை இன்று வாசிக்க வந்த
மந்தமில்லா சுகந்தமே... ஆரணங்கே... அணங்கே... புதிய மன்மத ராணியே வருக !!