இன்னும் சிலருக்கு
துணிகளைக்
காயப்போட்டு
சமையலிலில்
மூழ்கிய சிலருக்கு...
பாலிதீன் பை
கைவசம் இல்லாமல்
நடந்துக்கொண்டே
செல்பேசியில்
காதல் செய்யும்
சிலருக்கு....
வெளிநாட்டு
பயணத்திற்காக
விமான நிலையத்தில்
அமர்ந்திருக்கும்
சிலருக்கு...
அரைஇறுதிக்காய்
ஆவலோடு அமர்ந்து
மட்டைப்பந்தாட்டத்தை
தொலைக்காட்சியில்
இரசிக்கும் சிலருக்கு...
இறுதிக்கட்ட காட்சியை
வெயிலில் படம்பிடிக்க
கட்டாயத்தில் இருக்கும்
ஒளிப்பதிவாளருக்கு...
இன்னும் சிலருக்கு
நிம்மதியை தந்தது...
கருமேகம்
இல்லாத
வானம்...
--கனா காண்பவன்