உண்மையான உழைப்பாளி

தேசத்தை விட்டு
உறவுகளைப் பிரிந்து
கனவுகளைச் சுமந்து
கடல் கடந்து சென்று
பனியில் விறைத்து
ஆசைகளை அடக்கி
இதயத்தை கல்லாகி
உழைக்கும் ஓர்
உண்மையான உழைப்பாளியின்
வலியும் வேதனைகளும்

மாடி வீட்டில் இருந்து
விரும்பியதை செய்து
அழகழகாய் ஆடைகள் அணிந்து
விதம் விதமாய் சுகங்களை
அனுபவிப்பவர்களுக்குப் புரியுமா??

அவனுக்குள் எத்தனை கனவுகள்
இன்றும் கனவாகவே இருக்கின்றன
இவன் உண்மையான தொழிலாளியா

அல்லது ......

கலர் கலரா கார்களில் போய் இறங்கி
A/c roomல் காலுக்கு மேல் கால் போட்டு
வேலை நேரத்தை வீணாக்கி
அரட்டை அடித்து விட்டு
நண்பர்களுடன் ஊர் சுத்தி விட்டு
உறவுகளுடன் சுகங்களை
பகிர்ந்து கொண்டு இருக்கும் தொழிலாளி
உண்மையான தொழிலாளியா??

எழுதியவர் : நளினி (3-May-11, 4:05 pm)
சேர்த்தது : Naliny
பார்வை : 581

மேலே