மே-3

அநீதி கண்டு
மனதிற்குள் வெகுண்டெழுந்து
ஆர்ப்பரித்து போராட
தோழர்கள் இல்லாத
நிலையிலும்
பேனாவை மட்டுமே
ஆயுதமாய்த் தாங்கி
போதைக் கும்பலின்
அநீதி களைய
முயற்சித்த தோழா !

குல்லர்மோ கானோ இசாசா
உனது பெயரும் புதிது
உனது நாடான கொலம்பியாவும்
புதிது எமக்கு
உமது வீரத்தால்
எமது தோழன் ஆனாய்
எங்களின் முன்னோடி
ஆனாய் நீ !
என்றும் உன் புகழ் வாழி !

எழுதியவர் : (3-May-11, 3:56 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 386

மேலே