ஒரு அழகிய மரணத்தின் அருகில் - I கலீல் ஜிப்ரான் கவிதையின் மொழிபெயர்ப்பு
காதலால் போதையில் திளைத்து ஊறிய ..
இதயம் கொண்ட என்னை
நிரந்தர உறக்கத்தில் இருக்க விடுங்கள்!
வாரி வழங்கப்பட்ட ..
எண்ணற்ற இரவுகளும் பகல்களும்
நிறைந்திருக்கும் என் உயிருக்கு
இனி ஒய்வு கொடுங்கள்..!
தீபங்களையும் நறுமண ஊதுபத்திகளையும்
எனது இந்த படுக்கையினை சுற்றிலும் ஏற்றிடுங்கள் !
மல்லிகை செடி இலைகளையும் ரோஜா மலர்களையும்
இதோ..இந்த எனது உடலின் மீது தூவி விடுங்கள்!
வாசனைத் திரவியம் தலையிலும் பாதங்களிலும் தடவி விடுங்கள்!
பிறகு என் நெற்றியில் மரணத்தின் விரல்கள் எழுதியுள்ளதை படியுங்கள்!
சோர்ந்த என் விழிகள் மீளாத்துயிலின் கரங்களால்
மூடப்பட்டு ஓய்வெடுக்க விடுங்கள்!
வெள்ளி நரம்புகள் கொண்ட யாழின்..மெல்லிய அதிர்வில்
எழுகின்ற இன்ப ராகம்
என் இதயத்தினை அமைதிப்படுத்த விடுங்கள்!
இன்னும்..இன்னும் ..இனிய
இசை எழுப்பும் நரம்புகளின் நாதத்தால்
என் இதயத்திற்கு போர்வையிடுங்கள்!
****
என் கடந்த காலம் பற்றி கவிதை செய்யுங்கள் ..
என் விழிகளில் தெரியும் நம்பிக்கையைக் கண்டு ..!
அந்த நம்பிக்கை எனும் பஞ்சு மெத்தையின் மீதுதான் ..
என் இதயம் இதுவரையில் கொலுவிருக்கிறது என்பதால்!
****
புலரும் காலையினை வாழ்த்தும் மலர்களைப் போல்
உங்கள் கண்ணீர் துடைத்து
உங்கள் சிரங்களை நிமிர்த்துங்கள்!
என் மரணப் படுக்கைக்கும் ..
எல்லையில்லா பிரபஞ்சத்திற்கும்..
இடையினில் ஒளிர்ந்தபடி நிற்கும்
மரண தேவதையைக் காணுங்கள்!
ஓசையின்றி என்னருகில் வந்து ..
அவளது வெண் சிறகுகள் எனை அழைத்து
சமிக்ஞையிடும் ஒலியினைக் கேளுங்கள்!
****
வாருங்கள் ..தோழர்களே..
என்னருகில் வந்து என்னை வழியனுப்பி வையுங்கள்!
என் விழிகளை சிறு புன்னகையோடு
சற்றே தொட்டு பாருங்கள்!
தங்கள் மென்மையான ரோஜாப்பூவிதழ் கரங்களால்
சுற்றியுள்ள இந்தக் குழந்தைகள்
என் கரங்களை பற்ற அனுமதியுங்கள் !
சுருக்கம் கொண்ட கரங்களுக்கு சொந்தக்கார முதியவர்கள்
என் சிரத்தினில் கரம் வைத்து
என்னை ஆசீர்வதிக்க வேண்டுங்கள்..!
இங்கிருக்கும் இளம் கன்னியரெல்லாம் ..
எல்லையில்லா இறைவனது நிழல்..
என் விழித்திரைகளில்
படர்ந்திருப்பதை பார்ப்பதற்கும் ..
அவனது சித்தம் ..
என் மூச்சினில்
எதிரொலிப்பதைக் கேட்பதற்கும் ..
அவர்களை ..
என்னருகினில் ..
அழைத்து வாருங்கள்!
*******************************************************************************
The Beauty of Death XIV - Poem by Khalil Gibran
Part One - The Calling
Let me sleep, for my soul is intoxicated with love and
Let me rest, for my spirit has had its bounty of days and nights;
Light the candles and burn the incense around my bed, and
Scatter leaves of jasmine and roses over my body;
Embalm my hair with frankincense and sprinkle my feet with perfume,
And read what the hand of Death has written on my forehead.
Let me rest in the arms of Slumber, for my open eyes are tired;
Let the silver-stringed lyre quiver and soothe my spirit;
Weave from the harp and lute a veil around my withering heart.
Sing of the past as you behold the dawn of hope in my eyes, for
It's magic meaning is a soft bed upon which my heart rests.
Dry your tears, my friends, and raise your heads as the flowers
Raise their crowns to greet the dawn.
Look at the bride of Death standing like a column of light
Between my bed and the infinite;
Hold your breath and listen with me to the beckoning rustle of
Her white wings.
Come close and bid me farewell; touch my eyes with smiling lips.
Let the children grasp my hands with soft and rosy fingers;
Let the ages place their veined hands upon my head and bless me;
Let the virgins come close and see the shadow of God in my eyes,
And hear the echo of His will racing with my breath.