அவதிப்படும் நமது சொந்தங்கள்
தன் திருமணத்திற்கே
விடுமுறை என்பது இல்லை...
மூன்று நாள் விடுப்பில் வந்து
மூன்று முடிச்சு அவள் கழுத்தில் போட்டுவிட்டு
மூன்றே நாள் வாழ்ந்து விட்டு
மீண்டும் பணிக்கு செல்லும்
படைவீரர்கள் இவர்கள்....
மனைவியின் வளைகாப்பில்
அவள் கையில் எத்தனை வளையல்கள்
என்பதை கேட்டு நிம்மதி அடையும்
சிப்பாய்கள் இவர்கள்....
பிரசவத்துக்கும் வரமுடியாத
'பிர'சவத்துக்கும் வரமுடியாத
நாட்டைக் காக்கும்
உத்தமர்கள் இவர்கள்....
நீண்ட இடைவெளிக்குப்பின்
வீட்டிற்கு வரும் போது
"அம்மா யாரோ ஒரு அங்கிள் வந்திருக்காரு"
என்று தன் குழந்தையாலேயே
அன்னியமாக்கப்பட்ட
மண்ணைக் காக்கும்
மைந்தர்கள் இவர்கள்....
இவர்கள் எல்லையில்
அவதிப்படும் நமது சொந்தங்கள்...
அவர்கள் வாழ்வோ சோகங்கள்...