உணர்ந்து கொள்வோம் வாரீர் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
![](https://eluthu.com/images/loading.gif)
அர்த்தமான உலகில்
அர்த்தமில்லா வாழ்க்கை ஏனோ?
பெயருக்காக வாழும் மானிடா
உனக்காக வாழ்ந்ததுண்டோ?
உன் அம்மாவுக்கும் உனக்கும்
தொப்புள் கொடியினால் தாய்ப்பாசம்.
உன் உள்ளத்திற்கும்
எண்ணத்திற்கும் ஏனோ? இந்த வேசம்.
கடவுள் உலகில் படைத்தான்
வீணாக வாழ்வதற்கல்ல?உன்
நிரந்தர வாழ்க்கைக்கு பூமித்தாயில்
ஓரிரு காணிக்கையை சேர்ப்பதற்குத்தான்,
உன் உள்ளமே உலகில் சிகரம்
நல்ல எண்ணங்கள் அதில் அகரம்.
பொறாமைப்பட்டு வாழாதே தூசற்ற
மனதோடு பேசி விடு வெற்றி பெறுவாய்.
எல்லா மனிதனும் சபிக்க
பிறந்தவனில்லை.மண்ணில் சாதிக்க
பிறந்தவன்.நம் பிறப்பில் அர்த்தத்தை
உணர்ந்து கொள்வோம் வாரீர்