பிரபஞ்சம்

என்
உச்சி
முகர்ந்து
உன்
இதழால்
நீ
இட்ட
முத்தத்தால்
நீல
வான் தாண்டி
உச்சம் தொட்டேனடி !!...
தீபிளம்பில்
குளிர் காற்றையும்!!....
பனி இரவில்
கடும் வெப்பத்தையும்!!....
இறகில்லா
பறக்கும் பறவைகளையும் !!...
நீர் இன்றி
உயிர் வாழும் பூக்களையும் !!...
கொண்டிருக்கும்
உலகை கண்டேனடி
யாரும் கண்டிடா
அதிசய
உலகினை கண்டேனடி
இக்காதல்
எனும்
அழகிய
"பிரபஞ்சத்தில்"