காதலின் கனவு
காலம் கடக்கிறது -என்
காதல் தவிக்கிறது
உன் உறவை தேடி
கனவில் தரும் தொல்லைகளை
நிஜத்தில் தரப்போவது-எப்போது
நிலவை ரசிக்க ஆசை- ஆனால்
உன் முகம் இல்லையே - எனக்கு
எதிர்பார்ர்பு இல்லா அன்பே உண்மையாம்
எதிர் பார்க்கிறேன் -அதை பெற
அணையாத விளக்காய் என்னுள் இருக்கும் உயிரே
ஏற்றாமல் இருக்கும் மெழுகுவர்த்தி நான்
ஏற்றிவிடு கரைகிறேன் உனக்காக-இப்படிக்கு
காலத்தால் அழியாத காதலால் அழியும்
உன் நிழல்கள் இல்லாமல் உன் நினைவில் மட்டுமே வாழும் -பெண்