கடவுளும் கவிதையும்
உணர்வதே கடவுள் என்கிறார்கள் ....
உருவமே கடவுள் என்கிறார்கள் ....
உணர்ந்து பார்த்தால் உருவமில்லை ...
உருவமாக பார்த்தால் உணர்வில்லை ....
கவிதையும் இப்படிதான் ....
யதார்த்தமாக பார்த்தால் கவிதையில்லை...
கவிதையாக பார்த்தால் யதார்த்தமில்லை ......
கடவுளும் கவிதையும் அருவுருவமே ....!!!
கடவுள் என்றால் என்ன ....?
உணர்ந்த ஞானிகள் மத்தியில் ...
ஏராளமான பல்வேறு விளக்கம் ...
உணர்வுக்கேற்ப அவரவர் விளக்கம் .....!!!
கவிதை என்றால் என்ன ....?
விளக்கம் தர உலகில் கவிஞர் இல்லை ....
உணர்வுகளின் வெளிப்பாட்டை யார் ....
விளங்கபடுத்த முடியும் ....?
ஆத்மா திருப்திக்காக அவரவர் கடவுள் .....
ஆத்மா வெளிப்பாடாக அவரவர் கவிதை ....
கற்றறிந்தவனும் கவிதை எழுதுவான் ...
கல்லாதவனும் கவிதை எழுதுவான் ....
உயிர்களுக்கும் எல்லாம் கடவுள் பொது ...
சிந்தனையாளனுக்கு கவிதை பொது ...
கடவுளில் பெரிய சிறியகடவுள் இல்லை .....
கவிஞர்களில் பெரியவன் சிறியவன் இல்லை ....
இறையிருப்பை நம்புகிறான் ஆர்தீகன்....
இறையிருப்பை நம்பவில்லை நார்தீகன் ....
இருவருமே விரும்புவது கவிதை ...
எழுத்தின் கற்பனை வடிவம் கவிதை ...
செயலின் சிந்தனை வடிவம் கவிதை ....
பொருளின் உவமை வடிவம் கவிதை ....
எழுத்து, செயல் ,பொருளின் தோற்றமே .....
கடவுளும் கவிதையும் .........!!!