குறளில் கோடை நீராடல்

விவேகமில் லான்ஞனம் சத்தியமி லான்கவி
பாலையில்பா தையிழந்த ஆறு

கவைக்கு உதவாது காகித லட்சியம்
கைகொடுத்து வாழ்வில் உதவு


பொய்முகம் ஏந்தியே நல்லவன் போல்நடிப்பான்
பொய்முகம் தேர்ந்து விலகு

முத்துப்பந் தல்யாப்பு முன்னவர் யாத்தது
செத்திட விட்டிடுவே னோ

முல்லை விரிந்திடும் முத்த‌மிழ்த் தோட்டமாம்
யாப்பு தமிழ்பொக்கி ஷம்


கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-15, 10:54 am)
பார்வை : 95

மேலே