நெஞ்சம் நிறைந்த வீரம்

நெஞ்சுரம் கொண்டு கொஞ்சி விளையாடும்
அன்னையின் வீரப் பால் உண்டு நெஞ்சுரம் பெற்ற நீ
அந்நியனின் ஆதிக்கத்தில் அடிபணிய மாட்டாமல்
அஞ்சா நெஞ்சுடன் சமர் புரிந்து தாய் மொழியும் தாய்நாடும்
உன் மக்களுக்காய் மட்டும் உரித்தாக வேண்டும்
தன் மானம் ஒன்றே நம் தனிப் பெரும் சொத்து
தனக்கு நிகர் தானே என இறுமாப்புக் கொண்டு
தமிழனாய் தன் இனம் காத்து மொழி காத்து
தன் உயிரினும் மேலாய் தமிழையே நேசித்து
தரணியில் சரித்திரம் சொல்லும் தமிழனே
உன் வழி வந்த தமிழும் தமிழனும் நசுக்கப்படும் போது
உன் தியாகம் உன் வெற்றி உன் வஞ்சம்
ஒவ்வொரு தமிழனையும் தட்டி எழுப்புகிறது
தமிழனுக்கு தோல்வி இல்லை என்றும் என்றும்
தமிழன் தழைத்தோங்கும் தமிழ் சோலையாக
பெருமைடன் வாழ்வது நிஜம்
ஈரம் கொண்ட வீரம் கொண்ட தமிழன்
வாழ்வதே தமிழ் மண் என்று உலக மக்கள்
வாய் நிறைந்து சொல்ல வேண்டும்
தமிழன் என்றால் இவன் தான் என்று
உலகறிய புரிய வைக்க வேண்டும்
இது தன் மானம் உள்ள தமிழனின்
உள்ளம் கொண்ட கொள்கையாகும்

எழுதியவர் : (19-Apr-15, 11:34 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 310

மேலே