தெய்வீக மலர்கள்

தென்றலி லாடிடும் தெய்வீக தேன்மலர்கள்
செண்பகம் மல்லிகைமுல் லை

முல்லைமுத் துப்புன் னகையில் சிரித்திடும்
முத்துக் குமரன்மார் பில்

செண்பகம் தோட்டத்தில் நன்கலர்ந்து அன்னையின்
மார்பில் சிரிப்பாள் மணந்து

மல்லிகை மங்கையர் கூந்தல் தனிலழகு
அன்னைமார் பில்பே ரழகு

செண்பகம் மல்லிகை முல்லையால் அர்ச்சிக்க
புண்ணிய முண்டுவாழ் வில்

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-15, 6:17 pm)
பார்வை : 210

மேலே