கனவின் மறுபக்கத்தில்

நேற்று இரவில்
எனது கனவில்
எல்லா மதக் கடவுள்களும்
கைகோர்த்தபடி
ஒற்றுமை ஊர்வலம்
போன பூரிப்பில் நான்...
விடிந்ததும் ஊடகச்
செய்திகளில் பார்த்தேன்
மதக்கலவரங்களில்
குருதியாறு ஓடியத் தடயங்களும்
மாண்ட மனிதர்களின்
உடலமும்.