உருப்பட ஒன்றேனும்
இன்னும் எத்தனை நாட்கள்
எதற்காக? யாது பயன்?
எதற்கிந்தக் காத்திருப்பு
முடித்த சாதனைப் பட்டியல்
முங்கித் தவிக்குதோ
முடிக்காத வேள்விகள்
ஏங்கித் தவிக்குதோ
எவர்க்கும் உதவா வாழ்வில்
இடமடைத்துக் கொண்டு
இறுமாந்து எக்காளமிட்டு
எமன் வரட்டு மென்று
எதிரிகளை நாளும்
எண்ணிக்கையில் பெருக்கி
எவர்க்கினிக்கும் வாழ்விது
எண்ணித்தான் கொள்வீர்.
ஒரு நிமிடம் கண் மூடி
ஒருங் கிணைந் தால்
உணர்வீர் உதவாத
வாழ்விது உருப்படியாய்
ஒன்றுமில்லை உருப்பட
ஒன்றேனும் செய்துவிட்டு
புறப்படும் வேறொருவர்க்கு
வளர வழி விட்டு!
- முரளி