நாக தோஷம்

அழகான குக் கிராமம் ....
கூப்பிடு தூரத்தில் ஆங்காங்கே ....
குடிசைவீடுகள் இடையிடையே ...
வேற்று காணிகள் ,முற்பற்றைகள் ....
முற்பற்றைகள் நடுவே மண் புற்றுகள் ...
எந்தபுற்றில் பாம்பு வசிக்கிறதோ ....
அந்த புற்று கோயிலாக மாறும் ...!!!

வீடுகள் என்னவோ குடிசைகள் ...
பாம்பு புற்றுகள் செங்கல் மாடங்கள் ...
பல கால நித்திய பூசை , பால் அபிஷேகம்...
ஏட்டிக்கு போட்டியாக புற்றுக்கள் ....
கோயிலாக மாறும் போட்டியாக ...
விதம் விதமான பூசைகள் ....
பக்தர்களுக்கு திண்டாட்டம் .....!!!

ஊரில் குறி சொல்பவரே நீதிபதி ....
ஊரின் நீதிபதி சொன்னால் இறுதி ...
யாரும் திருப்பி பேசமாட்டார்கள் ...
பேசினால் நாகதோஷம் பற்றிவிடும் ....
அவருக்கு வரும் கனவுகள் ...
காலபோக்கில் கோயிலாய் மாறிவிடும் ....
அயல் கிராமத்தவரும் வந்துசெல்வர் ...!!!

திருமணமாக விட்டால் நாகதோஷம் ....
குழந்தைகள் படிக்காவிட்டால் நாகதோஷம் ....
குடும்ப சண்டைக்கு நாகதோஷம் ....
ஊரில் மழைபெய்யாவிட்டால் நாகதோஷம் ....
நித்திய பூசைகள் ,அபிஷேகம் பல செய்தும் ...
ஊரின் நாக தோஷம் தீரவில்லை ....
ஊராரின் தோஷங்களும் தீரவில்லை ....!!!

நள்ளிரவில் தூங்கிய குழந்தையை ...
தீண்டியது நாகம் ,இறந்தது குழந்தை....
பொழுது விடிந்து ஊரெல்லாம் பேச்சு ...
அந்த வீட்டாருக்கு உச்சகட்ட தோஷமாம் ....
புற்றுகள் எல்லாம் கோயிலாக மாறின் ...
வீடுகள் தானே பாம்புக்கு புற்றுக்கள் ...
புற்றில்லாத பாம்புகளுக்கு தோஷமே ....!!!

இறை நம்பிக்கை நிச்சயம் தேவை ....
இறையில்லாமல் இயக்கமும் இல்லை ...
இரக்கத்தை காட்டுங்கள் என்றுதான் ...
இறைவன் ஒவ்வொரு உயிரினத்தையும் ...
இறைவாகனமாய் வைத்திருக்கிறான் ....
இதை உணரும் விழிப்புணர்வு வந்தால் ....
இவ்வுலகில் எந்த தோசமும் இல்லை ....!!!

எழுதியவர் : கே இனியவன் (17-Apr-15, 9:30 am)
Tanglish : naaga thosam
பார்வை : 46

மேலே