கவிதை தென்றல் கயல் விழி அவர்களுக்கு பிறந்தநாள் நாள் வாழ்த்து
கடல் சூழ்ந்த நடுவில்
ஓர் நிலத்தீவு......!
தமிழ் இனம் சூழ்ந்த நடுவில்
ஓர் பெண்புறா......!
தமிழ் மொழி சூழ்ந்த நடுவில்
ஓர் கவிதை பெட்டகம்......!
தமிழ் எழுத்துக்கள் சூழ்ந்த நடுவில்
ஓர் கயல்விழி.......!
கண் இமைக்கும் கணத்தில்
கவி படைக்கும் தனித்திறன்......!
தமிழ் மொழியால் எழுத்து தளத்தில்
கவிதையாய் வீசிடும் தென்றல்......!
நீ தமிழ் மொழியை கவிதையால்
சுவாசிக்கும் உயிர் மூச்சு........!
தமிழீழ மண்ணில் பிறந்து
தரணியெங்கும் புகழ்பாட.....!
தமிழ் கவிதை படைத்து
தனி நாட்டுக்காக ஏங்கும்
தமிழ் அன்னை மகள்.....!
அங்கு தமிழ் இனம் ஓரளவு
அழிந்தது உண்மைதான்......!
அதை சமன்செய்ய
உன் எழுத்துக்களால்
மடிந்த மாவீரர்கள்
மறுஜென்மம் எடுத்து
உன் மண்ணில் பிறக்கட்டும்.......!
உன் கவிதையின் நடை கண்டு
எதிரிகளின் படை அஞ்சட்டும்........!
உன் கவி தொகுப்புகளை கண்டு
தோட்டாக்கள் துவண்டு விழட்டும்.......!
உன் கவிதையிலிருந்து அருவியாய்
கொட்டும் படைப்புகள்.......!
உறவிழந்து வாழுகின்ற தமிழர்களின்
மனதை நனைக்கட்டும்..........!
ஆயதங்கள் ஆயிரம் எதிரியிடம் இருக்க
அதை எதிர்க்க உன் எழுதுகோலின்
கூர்முனை உன்னிடம்........!
இப்பிறந்த நாளில் சபதமெடு
தமிழ் எழுத்துக்களை அரவணைத்து
தமிழீழத்துக்காக மடிந்த மாவீரர்களை நினைத்து
எழுச்சி கவிதைகளை எழுதிகொண்டிருப்பேன் என.......!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்