விரசம்
விரசம்!
---------
காசு வாங்கி
நீள் மதிலுள்
கூண்டி லிட்ட
விலங்கு தனை
காண வந்த
மானுடத்தின் ஆடை
அலங்காரம் கண்டு
அழகான விலங்குகள்
ஆச்சர்யம் கொண்டது!
ஆடை விலக்கியதால்
விலங்கோ நாம்
அதில் விரசம்
ஒன்றும் இல்லையே!
-------முரளி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
