உன் வெட்கத்திற்கு விடையாகி போகவா - பூவிதழ்
சகியே !
உன் நினைவுகளோடு
உறங்கசெல்கிறேன் அவைகள்
கனவுகளாக மலரட்டும்
விடியலில் பறித்து தருகிறேன்
சூடிக்கொள் புன்னகையாக !
உன் இரவுக்கு
வெளிச்சமாகிப்போகவா இல்லை
விடியும்வரை உன் வெட்கத்திற்கு
விடையாகி போகவா !
உன் இதழ் மட்டும்தான்
இனிக்கும் என்றிருந்தேன்
உன் விரல்களை
சுவைக்கும்முன்னே !