மெய்யான உறவு

______________________-----------------------------------

சிற்றோடையில் ஒளிந்த
மாலைப் பொழுதினை போல
மயங்கிய விழிகள் உனதன்றோ
நாணத்தால் சிவந்த உள்ளத்தினை
இரு கரங்கள் நீட்டி ஒப்பனைகள் செய்தேன்
இதயமெனும் முத்தமிழ் சுரத்திட

______________________------------------------------------

புதியதாய் தோன்றி
வாசனையில் உறைந்த
மதுகரம் மரபு மாறாமலே
பூவிதழ் தடவ -தன்
உறவினைப் பிரிந்து
ஓம்படையாய்-தன்
மனதினை ஒப்படைத்து
கன்னிவேட்டையில் களவாடுகிறதே
கொண்டலில் மறைந்த காரிகையை

______________________----------------------------------

பாசம் நிறைந்த மகுடம்
தோல்வியிலும் வாகை சூட
அகம் புணரும் உணர்வுகள்
உருவங்கள் இன்றி பரிமாற
வர்ணங்கள் சூழ்ந்த சாயங்களும்
கன்னங்களில் ஒலிப்பதிவாகி
மெளன மொழியினை
அடையாளபடுத்துகின்றதே முத்தங்களாக

_____________________-----------------------------------

பெண்மை பரவிய மண்ணுலகு
காதல் எனும் போர்வையில்
சிக்கிக் கொண்டு
வலிகள் எனும் கடலில்
காயங்களை மாற்றி
கசப்பான நினைவுகளோடு
துயில் கொள்கின்றதே

மெய்யான உறவு ஒன்று ஏற்கும் வரை .....................

எழுதியவர் : கீர்த்தனா (17-Apr-15, 12:47 pm)
Tanglish : meiyaana uravu
பார்வை : 111

மேலே