என்னுள் நீ

பகல் இரவு எதுவானால் என்னஉன்னோடு இருக்கும் -என் நிமிடம்
மழை கண்ட மயிலாய்- உன்னை கண்டு மகிழும் -என் மனம்
நாளை உனை எனதாக்கிட இன்று துடிக்கும் -என் இதயம்
எனதாக இருந்தாலும் உனக்காக வாழும் -என் உயிர்
இருவரை ஒருவராக மாற்றபோகும்-என் காதல்
அதன் நுழைவாக அமைந்த -என் கண்கள்
நேசமாய் வந்து நினைவாய் எழும் -என் கனவுகள்
எனதனைத்தும் உனதாக உறவாக மாற விழையும் மலர்

எழுதியவர் : கார்த்திகா (17-Apr-15, 5:48 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : ennul nee
பார்வை : 217

மேலே