மணல் இட்லி

குவித்திருக்கும்
ஈர மணலை
சைக்கிள் சக்கரத்தால்
நறநறவென்று
கிழித்துச் செல்லும்
இச்சிறுவர் சிறுமியர்
கற்பனை கூட
செய்து பார்த்திருக்கமாட்டார்கள் -
கொட்டாங்குச்சியில்
நீ ஈர இட்லி சுட்டதையும்
பச்சை வேப்பங்காயை
பால் துளியுடன்
மையத்தில் பதிய வைத்து
நான் பகடி செய்ததையும்

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (17-Apr-15, 6:13 pm)
Tanglish : manal idli
பார்வை : 157

மேலே