மனதின் ஏக்கம்
கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறது மழை!
மின் விளக்குகள் எல்லாம் அணைந்து
நிசப்தமான காரிருள்!
மனசுக்குள்ளும் பரவிவிட்டது
அந்த இருளின் தன்மை!
மின்மினி பூச்சி போன்ற
சிறிய வெளிச்சம் கிடைத்தாலும் போதும்
ஏங்கத் தொடங்கியது மனம்!
மின்னல் கூட தலைமறைவாய் போய்விட்டதா?
வாகனங்கள் கூட அந்த சாலையை
மறந்து வேறு பாதைக்கு சென்றுவிட்டதா?
சிறிய வெளிச்சத்திற்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறது மனம்!