மாயை --- சுடர்
கருணையில்லா மனிதனே
கடைசியில் நாம் சாம்பலே ....
சதையாய் வந்த நாம்
சாதியின் பேரில் சாகிறோம்......
சிதறும் சிந்தனையை தெளிவாக்கு -இந்த
தரணியில் நீ தலைத்தூக்கு ....
நிரந்தரமான உலகில்
நிலையில்லா வாழ்க்கை
நிஜமில்லா மனிதர்கள் .....
கருவறை கல்லறை மட்டுமே
நம் வாழ்நாளின் மிச்சமே .....
உயிரும் உடலும் மாயையே -அதை
உணர்ந்தால் நம் வாழ்வு மேன்மையே ........