இரத்தத்தை நிரப்பிக் கொண்டிருந்தாள்

இரண்டு வயது எனக்கு

இரண்டு அடி நடந்து கல் மீது விழுந்தேன்

கையிலே சிறு காயம்

ஒரு சொட்டு இரத்தம்

“ஐயோ ! என் கண்ணு விழுந்துட்டியா

எவ்ளோ இரத்தம்”

பதறிப்போனாள் அம்மா

ஓராயிரம் சொட்டுக்கள் கண்ணீர் துளியோடு !

காலச்சக்கரம் சுழன்று ஓரிடத்தில் நின்றது

அப்போது எனக்கு வயது இருபது

என் மீது தாமரை மலரின் மணம் வீச ஆரம்பித்தது...

என்னை அறியாமல் துள்ளிக்குதித்தேன்

மழை பெய்யாமலேயே சாரல் என் மீது பட்டது

சில்லென்ற காதல் மழை என் மீது பொழிய ஆரம்பித்தது

என் அம்மா போன்ற பாசப்பரவச முகம்

அவளின் விரல் பிடித்து ஓராயிரம் மைல் தூரம் நடந்தேன்…

காதல் கடவுளையே சந்தித்தது போல் நினைவு

கடவுளுக்கு பொறாமை போலும்

என் காதலுக்கு கரும் புள்ளி வைத்தான்…!

அவள் என்னை காதலிக்க மறுத்தாள்

கவிதைகள்

ஆயிரம் முறை அவள் பின் அலைந்தேன்

வெறுத்தே விட்டாள்..!

ஒரு பாட்டில் பீர் என்னுள் நடனமாட

தீயில் எரிந்தது என் மனம் !

அவளை நினைத்தேன்

பித்தம் பிடித்து அலைந்தேன்

என் கையில் பிளேடு அவள் பெயரை பொறித்தது

இரத்தத்தில் மிதந்தது அவள் பெயர்

கொட்டியது ஓர் பேரருவி

அந்த அருவியும் அவள் பெயரில் ஓடியது

மயங்கி விழுந்தேன்...

“சாப்பிட்டியாடா ?” அம்மாவின் குரல்

சட்டென்று எழுந்தேன்

கனவு கலைந்தது...!

கையைப் பார்த்தேன் வீங்கியிருந்தது

மனவலியோடு கைவலி போட்டி போட்டு கொண்டிருந்தது

நினைவில் வந்தாள் அம்மா

“ஒரு சொட்டு இரத்தம் வழிந்ததற்கே பதறினாளே !

ஒரு குடமே நிரம்பியிருக்கிறதே

இதைப் பார்த்தால் என் தாயின் முகம்…!

ஐயோ ! மூச்சு திணறுமே

இதயம் பலவீனமாயிற்றே

கவிதைகள்

என் தங்கத்தால் தாங்க முடியாதே…!

என் தாயிற்கு சொந்தமான இரத்தம்

என்னால் குப்பைத் தொட்டியில் வீழ்ந்து விட்டதே !”

ஆயிரம் முறை அவள் பின் அலைந்த நான்

என் பின்னே அலைந்த தாயின் காலடியை பார்க்க மறந்து விட்டேனே..!

காதல் கடவுளை சந்தித்த நான்

என் கடவுளை சந்திக்க மறந்து விட்டேனே..! “

ஏங்கி ஏங்கி அழுதேன்...

என் தாய்க்கு சம்பந்தம் இல்லாத ஒருவளுக்காக

என் கை கிடக்கிறது மருத்துவமனையில்…..

ஒரு ரூபாய் பிளேடு அறுத்த அந்த இடத்தில்

விலை மதிப்பில்லாத இரத்தத்தை

நிரப்பிக் கொண்டிருந்தாள் என் அம்மா

அவளின் இரத்தக் கண்ணீர் வழியாக…..!

எழுதியவர் : தனா கே ஜே (18-Apr-15, 1:00 pm)
சேர்த்தது : தனா கே ஜே
பார்வை : 125

மேலே